Our goal is to enlighten the world


முருகப்பெருமான் அருளிய வேத நூல்கள் (தமிழ்) - 4 வேத நூல்கள் (Set of 4 Veda Books Bundle)

முருகப்பெருமான் அருளிய மூளை, ஒளி, ஒலி & பிரம்மம் என்ற நான்கு வேத நூல்களும் இதில் அடங்கும். சிறப்பு சலுகை பிரதிகள் உள்ளவரை மட்டுமே.

The four veda books are available only as a bundle and cannot be purchased individually in this offer.

இந்நான்கு வேத நூல்களைப் பெறுவோர், முருகப் பெருமான் அருளிய "வேத நூல்களின் பலாபலன்கள்" என்ற நூலினையும் தனியாக பெற்று (at 25% discount) பயனடையவும்.

Rs. 800.00


வேத நூல்களின் பலாபலன்கள்

முருகப்பெருமான் அருளிய ''வேத நூல்களின் பலாபலன்கள்' எனும் இந்த நூல் கலியுகத்தின் நான்கு வேத நூல்களின் புகழினை எடுத்துரைக்கின்றது. வேதங்களை கற்று அறிவதினால் உருவாகின்ற தசவித பலாபலன்களும், அதனை உணர்ந்து உள் ஏற்பதினால் உருவாகும் அற்புத நிலை மாற்றங்களும், இறை நிலையைக் குறித்து உணர்ந்தவற்றை பிற ஆன்மாக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் உருவாகும் நற்பலன்களும், அதனை ஏற்றிடும் ஆன்மாக்கள் உயரிய இறைவனை உணர்ந்திட்டால் உருவாகின்ற பலாபலன்களும் எத்தகைய ஆற்றல் வாய்ந்தவை என்பதனை இந்நூல் விரிவாக விளக்குகின்றது. வேதங்களை கற்பதே புண்ணியம் எனில், அதன் பலன்களை அறிவது அதனைக் காட்டிலும் புண்ணியமாகும். எந்த செயலினையும் ஏன் செய்கிறோம் என்றே அறிந்து செயலாற்றினால் அதன் விளைவுகள் பெருகிடும். வேதங்களை கற்று அறிந்திடும் முன்னர், அதன் பலாபலன்களை ஒவ்வொரு மானுடரும் தெளிவுற உணர்தல் வேண்டும் என்று அகத்திய மகான் தனது அருளுரையினில் கூறுகிறார்.

Rs. 170.00 Rs. 225.00


The Science and Purpose of Life

This book is a translation of the Tamil original "Vazhvial", bestowed by Lord Murugar. This is the first publication from Gnanalayam translated in English. This book revealed by Lord Murugar will serve as a food for thought for the upliftment of the entire humanity. This inspiring book is a self-help tool for the lost souls across the world who are perplexed as to how to go about their life, during the last years of this kali yuga. The simple, yet profound principles explained in this book will help a person liberate his soul, acquire a disease free body, realize the Supreme Truth and live a life of absolute love and bliss. Interestingly, Lord Murugar also answers probable questions that a reader would ask while going through this book. He also gives insights about the visible changes that humanity can see and experience during the culmination of kali yuga and the advent of the Golden Age, which are mind blowing revelations. Since the dawn of the new era is near, he cautions humanity to overcome the miserable conditions of maya, karma and ego in order to attain the highest state of liberation and salvation.

Rs. 200.00


Human Brain - The Royal Gland

This book titled 'Human Brain - The Royal Gland' is the translation of the Tamil original "Moolai Ennum Thalaimai Surabi' authored by Lord Murugar. It is a breakthrough scientific revelation of the unknown six glands of the Human Brain surrounding the pituitary gland in a perfect manifestation of the Solar system (macrocosm) in the Human Brain (microcosm). The 48 chapters of this divine magnum opus explains the formation of the brain and its core connection with the cosmos. The Book unravels the location of the ‘Soul atom’ in the brain , its source of energy and decodes the secrets of the Kabbalistic tree of life. The book answers the existential question of 'Who Am I', the purpose of one’s birth and the path to liberation from the impending deluge. The final trumpet in this divine book will bridge the missing link between science and spirituality. The book also has a special message from the author, Lord Murugar for the English speaking audience.

Rs. 500.00


ஆகம வேதம்

இந்நூல் பாரத்வாஜ மகரிஷிகளால் தமிழ் மொழியில் அருளப்பட்டது. 'ஆகம வேதம்' உயரிய பரமனை அடைய உதவும் அடிப்படை வேதம் ஆகும். கலியுக மானுடர்கள் தன்னுள் வீற்றிருக்கும் ஆத்மாவை அறியாது போனதே பரம்பொருளை உணராது போனதற்கும் காரணம் ஆகும். இந்நூல் மாயை, கர்மா மற்றும் ஆணவமாகிய மும்மலங்களைக் களையும் முறையையும், மறந்துபோன அதன் செயல் முறையாக்கத்தையும் எடுத்துரைக்கின்றது. ஆகம வேதம் ஓர் அற்புத பாடநூல் ஆகும். இந்நூல் ஒருவர் “கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம்" நூலை படிப்பதற்கு முன் அடிப்படை அடித்தளத்தை அமைக்கிறது.

Rs. 200.00


பிரம்மம்

முருகப்பெருமான் அருளிய 'பிரம்மம்' எனும் இந்த நூல் கலியுகத்தின் நான்காம் மறை நூலாகும். நான்மறை நூல்களிலே உயர்வு நிலைக்கொண்ட சூட்சம இரகசியங்களை இந்நூல் விளக்குகின்றது. அறியாமை விலகி, அஞ்ஞானமும் அழிந்து ஒளிரூபம் கண்டிடவும், ஒலிரூபம் கொண்டிடவும், நான்காம் வேத நூலாகிய "பிரம்மம்" உதவிடும். இந்நூலினைக் கரங்களிலே ஏந்தி நின்றால் ஆத்மக் கருக்கள் யாவும் விடுதலையுறும் என்று முருகப்பெருமான் கூறுகின்றார். 'பிரம்மம்' எனும் நாமம் கொண்ட இவ்வேத நூல் சுழுமுனை நாடிகள் குறித்தும், சூட்சம நாடிகள் குறித்தும், சூட்சம வழித்தடங்கள் குறித்தும் எடுத்துரைக்கின்றது. சூனியப் பிரம்மம் எனும் வெற்று நிலையினை எவ்விதம் உணர்வது என்றும் அற்புதமாக விளக்குகின்றது இந்நூல். நான்காம் வேத நூல் என்கின்ற இறுதி நூலான 'பிரம்மம்' கபால வாயில் குறித்தும், மோட்சநிலை என்பது என்ன என்றும் தெள்ளத்தெளிவாய் விளக்குகின்றது. எத்தருணத்தில் கபால வாயில் என்பது திறவு கொள்கின்றது என்றும், அதை நாம் எங்கனம் உணர்வது எனும் சூட்சம அறிவினை புகட்டுகின்றது. எவ்விதம் பஞ்சபூத மூலக்கூறுகள் அனைத்தும் சிரசின் உச்சியினை அடைகின்றது என்றும், அவையாவும் எவ்விதம் சூட்சம வாயில்களின் மூலம் சிரசின் மையத்தினை அடைகின்றது என்றும் வியப்பூட்டும் வகையில் வர்ணிக்கிறது இந்நூல். மூன்றாவது விழி, மூன்றாவது செவி, மூன்றாவது நாசி மற்றும் வாய்ப்பகுதி குறித்து ஆறுமுகனார் எடுத்துரைத்திட்டக் கருத்துக்களை அறிந்தால் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம். பிரமத்தினை கற்றறிந்தால் ஞானம் பெருகிடும். பிரம்மத்தினை உணர்ந்து கொண்டால் பரப்பிரமத்தினையும் உணரலாம், பேரானந்தம் அடையலாம்.

Rs. 250.00


ஈசனின் சுயசரிதம்

சப்தரிஷிகளில் முதன்மையான அகத்திய மகரிஷிகளும், நமது குரு அன்னை ஸ்ரீ பரிமள தேவியும் அருளிய ஈசனின் சுயசரிதம் எனும் நூல் ஞானாலயத்தின் தலைசிறந்த வெளியீடுகளில் ஒன்றாகும். ஈசனின் சுயசரிதம் எனும் அனைத்துலக ஜீவன்களுக்கும் தந்தையாகிய பரமாத்மா உருவான வரலாற்றை மானுடர்கள் எளிதில் அறிந்திட இயலாது. பிரபஞ்ச இயக்கத்தின் “மூலம்” குறித்து அற்புத சத்தியங்களை எடுத்துரைக்கும் இந்நூல் வெட்டவெளி மற்றும் பேரண்டப் பெருவெளி பற்றியும், அண்ட சராசரங்களும், சூரியனும், சூரியக் குடும்பமும் எவ்வாறு உருவானது என்ற உயரிய வினாக்களுக்கும் விடையளிக்கும். இவ்வற்புத காவிய நூலைக் காட்டிலும் உயரிய நூல் இப்பூவுலகில் உதித்திட இயலாது. பணிவின் உச்சத்தில் நின்று பக்தியோடு இக்காவியத்தை ஏற்றிடும் மானுடர்களுக்கு எளிதில் ஆன்ம விடுதலையும் பூரண ஞானமும் சித்திக்கும் என்பது அகத்திய மகரிஷிகளின் வாக்காகும்.

Rs. 500.00


வாழ்வியல்

Rs. 200.00

Out of Stock


ஞானாலயத்தின் அமைப்பும் நோக்கமும்

Rs. 100.00

Out of Stock


நவசக்தி நூல்கள்

Rs. 1000.00

Out of Stock


ஆத்மா உணர்த்திடும் அழகிய கவிதைகள்

Rs. 100.00

Out of Stock


கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம்

Rs. 600.00

Out of Stock